செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: முன்னாள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும்- புகழேந்தி

Published On 2018-05-29 04:04 GMT   |   Update On 2018-05-29 04:04 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான முன்னாள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். #TTVDhinakaran #Pugazhendhi #Thoothukudifiring
பழனி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்திருப்பது கண்துடைப்பு. அவர்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுவதாக ஆளும் கட்சியினர் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் பயங்கரவாதிகள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அப்படியானால் தமிழக டி.ஜி.பி., துணை முதல்வர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்தது எதற்காக?


ஜெயலலிதாவை கொன்றது சசிகலா என குற்றம்சாட்டிய ஆளும் கட்சியினர் இன்று ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிடுவது வெட்கக்கேடானது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தெருவில் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்படுகிறது.

கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட இந்த ஆணையம் கலைக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோவை நீதிபதி ஆறுமுகசாமி யாரை கேட்டு வெளியிட்டார்? இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. அது விரைவில் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #Thoothukudifiring
Tags:    

Similar News