லைஃப்ஸ்டைல்

தோசைக்கு சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

Published On 2018-02-15 06:37 GMT   |   Update On 2018-02-15 06:37 GMT
தோசை, நாண், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சில்லி சிக்கன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
தயிர் - ½ கப்
பூண்டு - 6 பல்
குடைமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1½ தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு,
[பாட்டி மசாலா] மஞ்சள்த்தூள்
போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.

தொடர்ந்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.

சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News