குழந்தை பராமரிப்பு

குழந்தை பிறந்து 1 வயது வரை கொடுக்க வேண்டிய உணவுகள்

Published On 2024-05-07 10:20 GMT   |   Update On 2024-05-07 10:20 GMT
  • 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம்.
  • குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் கொடுக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. குழந்தைகள் வளர்ச்சிக்கு திட உணவுகளை கொடுக்க வேண்டும்.

* குழந்தை பிறந்த முதல் மாதம் தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

* குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

* 3-வது மாதத்தில் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

 

* 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. பழச்சாறு வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

* 5-வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மசித்து கொடுக்கலாம்.

* 6-வது மாதத்தில் குழந்தை சில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் கொடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை கொடுக்கலாம்.

* குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

* குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* 10 மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.

Tags:    

Similar News