குழந்தை பராமரிப்பு
null

குழந்தை ஏன் அழுகிறது? அமைதிப்படுத்துவது எப்படி?

Published On 2025-11-11 12:00 IST   |   Update On 2025-11-11 12:00:00 IST
  • குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும்.
  • குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள நாளாகும்.

புதிதாக பெற்றோரான சிலருக்கு ஆரம்பத்தில் குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள சிறிது நாட்கள் எடுக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தை எதற்காக அழுகிறது என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் ஆரம்பத்தில் குழந்தைகளை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும். உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதையும், அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.  

குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்கள்

  • பசி
  • காற்று புகுதல்
  • அசௌகரியம்
  • சோர்வு
  • கோலிக் (குழந்தைகள் பொதுவாக ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக அழுவது - உடல்நல பாதிப்புகளை குறிக்காது)
  • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள். 

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எவ்வாறு அறிவது?

  • தொடர்ந்து அழுவது (அழும் விதம் வழக்கத்தை விட வித்தியாசமாகவும், அதிக சத்தமாகவும் இருக்கலாம்)
  • சிணுங்கும் சத்தங்களை எழுப்புதல்
  • அதிக சத்தமாக அலறல்
  • புரண்டு புரண்டு படுத்தல்
  • கை, கால்களை பிடுங்குவது, உடலை வேகமாக நீட்டுவது
  • எப்போதும் எரிச்சலாக இருத்தல் ( முகத்தில் வெளிகாட்டுவார்கள்)
  • சாப்பிடாமல் இருப்பது
  • இரவில் தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்தை விட அதிகமாக தூங்குவது.

மேற்கூறிய காரணங்கள் உடல்நல பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 


குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!

குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?

  • குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
  • வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
  • குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டுப்பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம். எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்
  • பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
  • மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
  • பொம்மைகளை கொடுத்து பார்க்கலாம்
  • சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
  • குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
Tags:    

Similar News