லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பான ஸ்நாக்ஸ் சிக்கன் நக்கட்ஸ்

Published On 2017-09-22 07:14 GMT   |   Update On 2017-09-22 07:15 GMT
குழந்தைகள் பள்ளியிலிருந்து மாலையில் வீட்டிற்கு வரும் போது சிக்கன் நக்கட்ஸ் செய்து ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். இனி சிக்கனை வைத்து நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
முட்டை -1
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 4 மேஜைக்கரண்டி
பிரட் தூள் - 10 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு .



செய்முறை  :

சிக்கனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

முட்டையை உடைத்து ஒரு பௌலில் கலக்கி வைக்கவும்.

மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

பிரட் தூளை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

ஊறிய சிக்கன் துண்டுகளை மைதா மாவில் பிரட்டி பிறகு முட்டையில் டிப் பண்ணி இறுதியில் பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

மீதமுள்ள எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.

சிக்கன் நக்கட்ஸ்சுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News