சமையல்

ரிச்சான கிரீமி மலாய் கான் மசாலா

Published On 2024-04-26 10:20 GMT   |   Update On 2024-04-26 10:20 GMT
  • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பூண்டு, இஞ்சி - 50 கிராம்

ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

குடை மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை -சிறிதளவு

கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

Tags:    

Similar News