சுண்டல் முதல் சூப் வரை பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
- எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
- பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
• தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.
• டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.
• முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
• வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.
• சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
• நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.
• எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
• பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
• கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.
• சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.
• சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.
• காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.
• கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.
• முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
• கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.
• வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.
• கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.
• சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.
• குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.
• பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
• சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.
• வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.
• பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.