சமையல்

இது தெரிஞ்சா போதும்..! நீங்கதான் சமையல் எக்ஸ்பர்ட்

Published On 2026-03-01 15:51 IST   |   Update On 2026-03-01 15:51:00 IST
  • சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.
  • குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.

* ராகி அல்லது சாமை தோசைக்கு சிறிது அரிசி மாவு கலக்கவும். தோசை சத்தாகவும், ருசியாகவும் இருக்கும்.

* ஆம்லெட்டுக்கு சிறிது பால் சேர்த்து முட்டையை அடித்தால் மென்மையாக இருக்கும்.

* பருப்பு, மசாலா, முந்திரிகளை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் ருசி கூடும்.

* பூரி தயாரிக்கும்போது மாவில் சிறிது ரவை சேர்த்தால் பூரி நன்றாக பூரிக்கும்.

* பாசிப்பயிறு குழம்புக்கு பயிறை நன்கு வறுத்து அரைத்து சேருங்கள். சுவை அதிகரிக்கும்.

* பன்னீர் கட்லெட் செய்யும் போது, பன்னீரை நன்கு வடித்துப் பிசைய வேண்டும்.

* சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.

* பாயசம் கொதிக்கும்போது அடிக்கடி கலக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரத்தில் அடிப்பிடிக்கும்.

* காய்கறி பாயசத்துக்கு அதில் சிறிது உளுந்து பருப்பு வதக்கி சேர்த்தால் ருசி அதிகரிக்கும்.

* தேங்காயை நன்கு விழுதாக அரைத்தால் சட்னி ருசிக்கும்.

* வெங்காயம் அதிகமாக இருந்தால், அதை கடலை மாவில் உருட்டி பொரித்து சாம்பாரில் போடலாம்.

* சாம்பாரில் சுண்டைக்காய் சேர்க்கும் முன்பு, அதை எண்ணெய்யில் வதக்கினால் அதிக கசப்பு தெரியாது.

*நெய் சாதத்திற்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நறுமணமும், சுவையும் கூடும்.

* பச்சை மிளகாய் நறுக்கும்போது கையில் எரிச்சலை தருமெனில், எலுமிச்சை சாறில் கைகளை கழுவுங்கள்.

* பூண்டு விழுதை அது பழுப்பு நிறமாகும் வரை வதக்கினால் வாசனை போகும்.

* குழம்புக்கு புளி கரைக்கும் போது கெட்டியான புளி நீரை சேர்க்க வேண்டாம். குழம்பு புளிக்கும்.

* குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.

* வெங்காயம் சீக்கிரம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். 

Tags:    

Similar News