பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
- பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும்.
- இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.
* கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கில் இருந்து கீழே விழாது.
* கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் சத்தும் போகாது. நிறமும் மாறாது.
* பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
* குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறு வாழைத் தண்டு அல்லது உருளைக்கிழங்கு அளவிற்கு சாதத்தை துணியில் கட்டிப்போட்டு குழம்பு கொதித்ததும் எடுத்து விடவும்.
* உருளைக்கிழங்கு வாங்கும்போது பச்சையாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
* உருளைக்கிழங்கு தோல் கெட்டியாக உரிந்திருந்தால் அது நல்ல உருளைக்கிழங்கு.
* வாழைக்காயை உணவில் சேர்க்கும்பொழுது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை இருக்காது.
* இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.