ஆன்மிகம்
குலசை ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்

குலசை ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்

Published On 2019-10-04 07:51 GMT   |   Update On 2019-10-04 07:51 GMT
குலசையில் முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரரின் வடிவ தத்துவத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குலசையில் முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் கதை என்னும் செங்கோலைத் தன் வலது கையில் தாங்கிய நிலையில் உள்ளார். அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார் என்பதே இதன் தத்துவம்.

ஞானமூர்த்தீஸ்வரர் தன் இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். அதில் உருவங்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. விபூதி மட்டுமே அதில் உள்ளது.

விபூதிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. ‘வி’ என்றால் மேலான என்று பொருள். ‘பூதி’ என்றறால் செல்வம் என்று அர்த்தம். மேலான செல்வத்தை பக்தர்களுக்கு அருளும் வல்லமை படைத்தவர் என்று இதற்கு பொருள்.

ஞானமூர்த்தீஸ்வரர் என்று பெயர் பெற்றதற்கும் காரணம் இருக்கிறது. ஞானம் என்றால் பேரறிவு மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள்.

அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். தவம் இருப்பவர்களுக்கு ஈஸ்வரன் பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி எனப்படுகிறார். ஞானமுடி சூடியிருப்பதாலும், ஞானபீடத்தில் எழுந்தருளிடயிருப்பதாலும் இவர் ஞானமூர்த்தியாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
Tags:    

Similar News