ஆன்மிகம்

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றம்

Published On 2019-03-12 09:46 GMT   |   Update On 2019-03-12 09:46 GMT
பரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய தங்க கதவு பொருத்தப்பட்டு அதை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்தார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய தங்க கதவு பொருத்தப்பட்டு அதை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்தார்.

இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 9 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியேற்றிவைக்க பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.

பங்குனி உத்திர திரு விழாவையொட்டி சபரி மலையில் ஐயப்ப பக்தர் கள் குவிந்து உள்ளனர். அவர்களை ஒழுங்குப்படுத்தி சாமி தரிசனம் செய்ய அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

சபரிமலை கோவிலில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இளம் பெண்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரி மலைக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அவர்களை தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்களும் போராட்டம் நடத்தலாம் என்பதால் சபரி மலையின் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News