ஆன்மிகம்

ராமனின் தொண்டர்

Published On 2019-01-06 04:44 GMT   |   Update On 2019-01-06 04:44 GMT
வைணவ ஆலயங்களில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்வதைப் பார்க்கலாம். அனுமார் ராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ராமனின் தொண்டனாக விளங்கியவர்.

வைணவ ஆலயங்களில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்வதைப் பார்க்கலாம். ராமாயணத்தில் ராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமாருக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அனுமாரின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர். ராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமாரைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமார் ராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமார் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.

வட இந்தியாவில் அனுமாரை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. சமஸ்கிருதத்தில் ஹனு என்பதற்கும் தாடை என்று பொருள். மன் என்பதற்கு பெரிதானது என்று பொருள். அதாவது பெரிய தாடையை உடையவன் என்று பெயர். அனுமனுக்கு தற்பெருமையைக் கொன்றவன் என்ற இன்னொரு பொருளும் உண்டு.
Tags:    

Similar News