ஆன்மிகம்

ஹரிவராசனம்

Published On 2018-12-11 08:11 GMT   |   Update On 2018-12-11 08:11 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘‎ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘‎ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.

சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ‎பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். 
Tags:    

Similar News