ஆன்மிகம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 12-ந்தேதி கும்பாபிஷேகம்

Published On 2018-10-23 05:41 GMT   |   Update On 2018-10-23 05:41 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற ஐம்பூதங் களில் இறைவன் நீர் தலமாக வீற்றிருந்து அருள்பாலிப்பது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இக்கோவிலின் பரிவார சன்னதிகள் மற்றும் கோபுரங்கள், விமானங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. திருப்பணி வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதையொட்டி வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

பாலாலயத்திற்கான யாகசாலை பூஜைகள் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளில் பாலாலயம் நடைபெற இருப்பதால் பக்தர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் வருகை தந்து இறைவனின் அருள் பெறும்படி கோவில் வளாகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை வருகிற டிசம்பர் மாதம் 12-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில் கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலைய துறையின் அனுமதி கிடைத்ததும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News