ஆன்மிகம்

செய்துங்கநல்லூரில் அய்யா வைகுண்டர் தர்மபதி திருவிழா

Published On 2018-08-16 09:58 GMT   |   Update On 2018-08-16 09:58 GMT
செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை அய்யா வைகுண்டர் திருநிழல் முத்து கிருஷ்ண தர்மபதி திருநாள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை அய்யா வைகுண்டர் திருநிழல் முத்து கிருஷ்ண தர்மபதி திருநாள் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை நடந்தது. 6 மணிக்கு உகப்பெருக்கு, காலை 7 மணிக்கு பால் தர்மம் நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தன குடம் எடுத்து தாங்கல் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.

காலை 10 மணிக்கு தவணைப்பால் தர்மம் நடந்தது. மதியம் 11 மணி முதல் பணிவிடையும் தொடர்ந்து உச்சிப்படிப்பு நடந்தது. மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் நடந்தது

மாலை 5 மணிக்கு உகப் பெருக்கு நடந்தது. 8 மணிக்கு நெல்லை பால முருகன் வழங்கிய அய்யாவின் பஜனை நடந்தது. இரவு 9 மணிக்கு அய்யா தாலாட்டு நடந்தது. இரவு 10 மணிக்கு பள்ளி உணர்த்தல் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கண்ணு, முத்தம் மாள், பாலகிருஷ்ணன், ராமர், பூல்பாண்டி மற்றும் திருத்தாங்கல் பணிவிடை யாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News