ஆன்மிகம்

ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது

Published On 2018-05-11 09:49 GMT   |   Update On 2018-05-11 09:49 GMT
உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது.
உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. இரவு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, தொடர்ந்து கும்பம் தெரு வீதி உலா ஆகியன நடந்தது.

வில்லிசை, செங்கிடாகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிசேகம், கும்பம் தெரு வீதி வருதல் ஆகியவை நடைபெற்றன. இரவு வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துவருதல் மற்றும் பக்தர்கள் அம்மனுக்கு நேமிசங்கள் படைத்தல் நடந்தது.

காலை வில்லிசை, சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல் நடந்தன. மாலை கற்பகபொன் சப்பரத்தில் உற்சவ அம்பாள் எழுந்தருளி வீதி உலாவருதல், இரவு 12 மணிக்கு தீபாராதனை, லட்சார்ச்சனை நடந்தது. நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை,இரவு 9 மணிக்கு சிறப்பு இன்னிசை கலைநிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News