ஆன்மிகம்
முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தங்களது உள்ளங் கைகளில் கை பாரமாக சுமந்து வந்தனர்.

திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி திருவிழா: பக்தர்களின் உள்ளங்கைகளில் பவனி வந்த முருகப்பெருமான்

Published On 2018-03-27 03:43 GMT   |   Update On 2018-03-27 03:43 GMT
திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி திருவிழாவில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் கை பாரமாக சுமந்து சென்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருவிழாவின் 5-வது நாளான நேற்று அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் சுவாமியை வெள்ளி யானை வாகனத்துடன் தலைக்கு மேல் கை பாரமாக சுமந்தனர்.


5-ம் நாள் விழாவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்த காட்சி.


மேல ரதவீதி சந்திப்பில் இருந்து பெரிய ரதவீதி வழியே முருகன் கோவில் வாசல் வரை வெள்ளி யானை வாகனத்தில் அமர்ந்த முருகப்பெருமானை உள்ளங்கைகளில் சுமந்தபடி பக்தர்கள் சென்றனர். பொதுவாக திருவிழா காலங்களில் தள்ளுவண்டியில் சுவாமி நகர் வலம் வருவார். ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி திருவிழாவின் 5-ம் நாள் மட்டும் கை பாரமாக முருகப்பெருமான் எழுந்தருளுவது விசேஷமாகும். கை பார நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 30-ந்தேதி பங்குனி உத்திரமும், 1-ந்தேதி பட்டாபிஷேகமும், 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி தீர்த்த உற்சவமும் நடக்கிறது.
Tags:    

Similar News