ஆன்மிகம்

சாய்பாபாவின் சீடர்கள்

Published On 2018-02-24 05:35 GMT   |   Update On 2018-02-24 05:37 GMT
பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

1. தாஸ்கணு மகாராஜ்,
2. நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,
3. ஹரிசீதாராம் தீட்சித்,
4. உபசானி பாபா,
5. கபர்தே,
6. அன்னாசாகேப் தபோல்கர்.
7. மஹல்சாபதி,

ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும். உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும். மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.

நரசிம்ம சுவாமிஜி :

நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி. அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றைச் சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.
Tags:    

Similar News