ஆன்மிகம்

சிவாலயங்களில் சிவசூரியன் வழிபாடு

Published On 2018-01-11 06:21 GMT   |   Update On 2018-01-11 06:21 GMT
சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக சூரியன் திகழ்கிறார். இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம்.
சூரியன்-சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர். சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக சூரியன் திகழ்கிறார். இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவசூரியனுக்குத் தனித் சன்னிதி உள்ளது. இச்சூரியனுக்கு பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. 

சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண்தாமரை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளை பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரம் செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர்.
Tags:    

Similar News