ஆன்மிக களஞ்சியம்

மகாவிஷ்ணு தீரா காதல் கொண்ட துளசி தேவி

Published On 2024-05-23 10:37 GMT   |   Update On 2024-05-23 10:37 GMT
  • அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.
  • இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு இரண்டே இரண்டு பொருட்களின் மீது தீராத காதல் என்று திருமால் அடியவர்கள் சொல்கிறார்கள்.

அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.

இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரில்லாத பெண் என்று பொருள்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துளசியை திருத்துழாய் என்று அழைப்பார்கள்.

ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாக துளசி கருதப்படுவது.

அனுவரதமும் பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்.

புனிதமிக்க ஆபரணம் ஆகவும் துளசி திகழ்கிறது.

துளசியின் ஒவ்வொரு அங்கமும் புனிதமானது.

அதன் இலை, கிளை, வேர் மட்டுமல்ல, துளசி செடியை தாங்கி புண்ணியம் பெற்ற மண்ணும் மகத்துவம் பெற்ற தாகவே கருதப்படுகிறது.

துளசியின் வேர்களில் சகல தேவதைகளும் வாழ்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்பவருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

Tags:    

Similar News