ஆன்மிகம்

குரு என்பவர் யார் என்று தெரியுமா?

Published On 2017-11-24 08:49 GMT   |   Update On 2017-11-24 08:49 GMT
நவக்கிரகங்களில் உள்ள குருவும், தேவர்களின் ஆசானாக விளங்கும் பிரகஸ்பதி எனும் குருவும் தனித் தனியானவர்கள்.
உண்மையில் பரம்பொருளான ஈஸ்வரனே, தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தின் கீழ் மவுனமாக அமர்ந்து நம் மனதின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். சிவபெருமானே ‘விளக்கங்களால் பெறுவதல்ல ஞானம், அனுபவத்தால் உணர்ந்து அமைதி கொள்வது’ என்று, கையில் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.

பரமாத்துமாவை அடையும் வழியைச் சொல்லும் இந்த முத்திரை, நம் மயக்கங்களைப் போக்கி நல்வழியை அருளக்கூடியது. இந்த குருவே அனைத்து கலைகளுக்கும், செயல்களுக்கும் மூலமாக விளங்குகிறார்.

நவக்கிரகங்களில் உள்ள குருவும், தேவர்களின் ஆசானாக விளங்கும் பிரகஸ்பதி எனும் குருவும் தனித் தனியானவர்கள். இவர்களும் பரம்பொருளின் பிரதிநிதியான குருவான தட்சிணாமூர்த்தியினுள் அடங்குவர்.
Tags:    

Similar News