ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு 250 துறவிகள் பங்கேற்பு

Published On 2017-11-20 05:48 GMT   |   Update On 2017-11-20 05:48 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் 250 துறவிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், உத்திரகாசியில் உள்ள ஆசிசங்கர பிரம்மவித்யா பீடம், வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம், திருவனந்தபுரம் ஆர்ஷவித்யாபிரதிஷ்டானம் இணைந்து ஏற்படுத்தி உள்ள பகவத் பாதபக்த மண்டலி என்ற அமைப்பின் சார்பில் நமாமி சங்கரம் என்ற நிகழ்ச்சி விவேகானந்த கேந்திர வளாகத்தில் நேற்று தொடங்கியது.

முதல்நாளான நேற்று காலை சூரியன் உதய நேரத்தில் விவேகானந்த கேந்திரத்தில் திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 8 மணி முதல் 12.30 மணி வரை பகவதி அம்மன் கோவிலில் மாகாருத்ர ஜெபம் என்ற சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் 250 துறவிகள், 121 வேத பண்டிதர்கள், பகவத் பாதபக்த மண்டலி தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுவாமி அரிபிரேமந்திரானந்தர், சுவாமி சிவாத்மனாந்தா பூரி, பிரம்ம ஆத்மதீர்த்தா, ஆதி வைத்தியானந்த சரஸ்வதி, துணை தலைவர் சிவகுமார், அமைப்பு செயலாளர் அஜய்குமார், கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News