ஆன்மிகம்

காலத்தின் கடவுள் பைரவர்

Published On 2017-11-16 08:30 GMT   |   Update On 2017-11-16 08:30 GMT
‘காலக்கடவுள்’ பைரவர். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே.
விதை முளைத்து, வேர் ஊன்றி, செடியாகி, மொட்டு விட்டு, பூவாக மலர்ந்து, பிஞ்சாகி, காயகி மீண்டும் கனியாகி, நாம் பயன்பெற இறைவன் படைப்பில் பெரிதும் பங்கு பெறுவது காலமே. காலம்தான் அனைத்தையும் பக்குவம் அடையச் செய்கிறது. பக்குவப்பட்ட பண்டம் தான், நமக்கு முற்றிலும் பயனாகிறது. எனவே காலம் தான் கடவுள் அல்லது கடவுள் தான் காலமாகிறது.

அந்தக் ‘காலக்கடவுள்’ தான் பைரவர் ஆவார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. தொல்லைகள் அகன்றிட, மற்றவர் நமக்கு செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் விலகிட, கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வென்றிட பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

மனிதன் காலத்தின் பிடியில் சிக்கி முதுமை அடைகிறான். அந்த முதுமை நிலையை அடையும் வரை அவன் காலத்தின் பிடியில் சிக்கி பெறுகின்ற அனுபவங்கள் பலப்பல. அவ்வாறு பெறும் அனுபவங்கள் யாவும், பைரவரை ஆழ்ந்த பக்தியால் துதிப்போர்க்கு இன்ப அனுபவங்களாகவே அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

விதை முளைத்து, வேர் ஊன்றி, செடியாகி, மொட்டு விட்டு, பூவாக மலர்ந்து, பிஞ்சாகி, காயகி மீண்டும் கனியாகி, நாம் பயன்பெற இறைவன் படைப்பில் பெரிதும் பங்கு பெறுவது காலமே.

காலம்தான் அனைத்தையும் பக்குவம் அடையச் செய்கிறது. பக்குவப்பட்ட பண்டம் தான், நமக்கு முற்றிலும் பயனாகிறது. எனவே காலம் தான் கடவுள் அல்லது கடவுள் தான் காலமாகிறது.

அந்தக் ‘காலக்கடவுள்’ தான் பைரவர் ஆவார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே.



தொல்லைகள் அகன்றிட, மற்றவர் நமக்கு செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் விலகிட, கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வென்றிட பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

மனிதன் காலத்தின் பிடியில் சிக்கி முதுமை அடைகிறான். அந்த முதுமை நிலையை அடையும் வரை அவன் காலத்தின் பிடியில் சிக்கி பெறுகின்ற அனுபவங்கள் பலப்பல. அவ்வாறு பெறும் அனுபவங்கள் யாவும், பைரவரை ஆழ்ந்த பக்தியால் துதிப்போர்க்கு இன்ப அனுபவங்களாகவே அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அஷ்டவித அர்ச்சனை

ஈசனுக்குப் பஞ்சமுக அர்ச்சனை, கந்தனுக்கு ஷண்முக அர்ச்சனை செய்வது போல், பைரவருக்கு அஷ்டவித அர்ச்சனை செய்யப்படுகிறது. எட்டுப் பண்டிதர்கள் சுற்றி நின்று, தும்பை, செம்பருத்தி, ஆத்தி, கொன்றை, ஊமத்தை, செண்பகம், கள்ளி, நெருஞ்சி ஆகிய மலர், இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதையே ‘அஷ்டவித அர்ச்சனை’ என்கிறார்கள். அதைத் தொடர்ந்து, பைரவரை மகிழ்விக்க எட்டுவிதமான அன்ன வகைகள், முக்கியமாக நெய்யில் ஊறிய வடை, தேனில் ஊற வைத்த வடை, தேனில் ஊறவைத்த இஞ்சி முதலியவை இடம் பெறும்.

இரண்டு நாய் வாகனம்

பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சில இடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சில ஆலயங்களில் மட்டும் இரண்டு பக்கமும் நாய் வாகனத்துடன் வீற்றிருப்பதையும் நாம் பார்க்க முடியும். இப்படி இரண்டு நாய்களுடன் இருக்கும் பைரவரை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும். அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும்.
Tags:    

Similar News