ஆன்மிகம்

முதல் வணக்கம் பத்மாவதிக்கு என்று சொல்வது ஏன்?

Published On 2017-10-14 08:20 GMT   |   Update On 2017-10-14 08:20 GMT
பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல. முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.
Tags:    

Similar News