ஆன்மிகம்

கல்வியின் தெய்வம் அன்னை சரஸ்வதி

Published On 2017-09-28 09:07 GMT   |   Update On 2017-09-28 09:07 GMT
இந்துக்களின் அரிகரன் கடவுள் ஞானத்தின் கடவுள் கலைகளின் கடவுள், வேதத்தின் தாய், வாக்கு தேவி, இவளிடமிருந்தே அனைத்து கலைகளும் பிறக்கின்றன.
இந்துக்களின் அரிகரன் கடவுள் ஞானத்தின் கடவுள் கலைகளின் கடவுள், வேதத்தின் தாய், வாக்கு தேவி, இவளிடமிருந்தே அனைத்து கலைகளும் பிறக்கின்றன. அன்னத்தினை வாகனமாக கொண்டவள். யோகக் கலையின் தலைவி காயத்ரி சரஸ்வதியின் மறு உருவர் கையில் பிரம்மா, விஷ்ணு சிவனின் அடையாளங்களைக் கொண்டவள் வெள்ளை தாமரை வெண்பட்டில் இருப்பவள்.

அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். சாரதா எனவும் அழைக்கப்படுபவள். ஞானம், அறிவு இவற்றின் பொதுவில் வெள்ளை தாமரை மீது அமர்ந்திருப்பது போல் நாம் வணங்குகிறோம். பாறையின் மீது அமர்ந்து வீணை வாசிப்பது போன்ற வடிவமும் சித்தரிக்கப்படுகின்றது. அறிவும், ஞானமும் உறுதியானது. நம்முடனே வருவதும் அன்னத்தினை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியினை நாம் பார்க்கின்றோம். அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல் நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள்.

சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவளுக்குத் தனிக் கோயில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.


ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி?

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தி-ல் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News