ஆன்மிகம்

பவானி கூடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா

Published On 2017-09-13 04:36 GMT   |   Update On 2017-09-13 04:36 GMT
பவானி கூடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழாவாகும். இந்த விழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது அந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவதாகும்.

அதன்படி குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும்போது துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் குருபகவான் செப்டம்பர் 12-ந் தேதி (நேற்று) முதல் வருகிற 24-ந் தேதி வரை வாசம் செய்வதாக ஐதீகம். அதன்படி 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு காவிரியில் புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் புண்ணியதலங்களில் ஒன்றான பவானி கூடுதுறையில் காவிரி மகா புஷ்கர விழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் புனித நீராட கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News