ஆன்மிகம்

முசிறி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-09-06 10:12 GMT   |   Update On 2017-09-06 10:12 GMT
முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் சக்தி நகர் காலனி பகுதியில் அமைந்துள்ள கணபதி மற்றும் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் சக்தி நகர் காலனி பகுதியில் அமைந்துள்ள கணபதி மற்றும் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், யாகவேள்வி பூஜைகள், கடம்புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. மேலும் கணபதி மற்றும் மகாமாரியம்மன் கோயில் விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை செவந்தலிங்கபுரம் சக்தி நகர் காலனி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News