ஆன்மிகம்

பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழா: பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் தரிசனம்

Published On 2017-06-10 10:14 GMT   |   Update On 2017-06-10 10:14 GMT
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழாவில் நடந்த பூப்பல்லகு உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாடிப்பட்டி குல சேகரன்கோட்டை தர்ம ராஜன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோவில் 97-வது வைகாசி விசாக திருவிழா கடந்த மே 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பாலாபி ஷேகம் முதல் நாள் வைகாசிவிசாகத்தன்று நடந்தது.

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள மவுனகுருசாமி மடத்தி லிருந்து அலகு குத்தி பக்தர் கள் பூக்குழி இறங்கி பால் குடம் எடுத்து கோவிலை அடைந்தனர். அங்கு பால தண்டாயுதபாணிக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் பட்டுப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி எழுந்தருளி கோவிலிருந்து புறப்பட்டு கள்ளர் மடம் வந்து சேர்ந்தார்.

மூன்றாம்நாளான நேற்று வல்லப கணபதி கோவில் வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின் விளக்கு தோரணங்களுடன் பூப்பல்லக்கில் பாலதண்டா யுதபாணி அலங்காரத்துடன் நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டது.

வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கிய வீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டுபெருமாள்நகர், பேட்டைபுதூர், போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி, வாடிப் பட்டி, ரெயில் நிலையம், சொக்கையா சுவாமிகள் மடம் வழியாக விடிய விடிய பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு கோவிலுக்கு சென்றடைந்தார்.

பூப்பல்லக்கையொட்டி வாடிப்பட்டி நகர் முழுவதும் மதுரை, திண்டுக்கல் சாலையோரம் உள்ள கடைகளில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News