ஆன்மிகம்

சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்

Published On 2017-05-27 07:57 GMT   |   Update On 2017-05-27 07:57 GMT
குற்றாலம் பகுதியில் ஒரு கோவில் முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்த அகத்தியர் பின்பு அதனை சிவன் கோவிலாக மாற்றினார். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.
கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்.

இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு நடந்துவந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம். அப்படி அகத்தியர் தென் பகுதி நடந்து வந்தபோது, குற்றாலம் பகுதியில் ஒரு கோவில் முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்தாராம் அகத்தியர்.

பின்பு அதனை சிவன் கோவிலாக மாற்றினார். அப்படி அகத்தியர் மாற்றிய கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகிலுள்ள திருகுற்றால நாதர் கோவில். தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.

இங்குள்ள சித்திர சபையில் தான் சிவன் நடனமாடினார் என்று கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் எல்லாம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ தான் இருக்கும். இக்கோவிலின் வடிவம் மட்டும் சங்கு வடிவில் இருப்பது தான் இதன் சிறப்பு.
Tags:    

Similar News