சினிமா

ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெறும் சமூக பிரச்சனை

Published On 2018-12-19 03:23 GMT   |   Update On 2018-12-19 03:23 GMT
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை என்னவென்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘பேட்ட’ சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth
ரஜினிகாந்த் தனது முந்தைய படங்களான ‘கபாலி’யில் மலேசிய தாதாவாகவும், ‘காலா’வில் மும்பை தாதாவாகவும் நடித்து இருந்தார். 2.0 படத்தில் எந்திரனாகவும், விஞ்ஞானியாகவும் இரு வேடங்களில் வந்தார். அவரது நடிப்பில் அடுத்தாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

மதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. படம் மலைப்பகுதியில் நடக்கும் கதை என்று இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அத்துடன் மதுரை பின்னணியிலும் படம் உருவாகி இருக்கிறது. 

வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர். இமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்றும் கூறினர்.



இந்த நிலையில், தற்போது நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. #Petta #Rajinikanth

Tags:    

Similar News