null
தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் வீடியோ
- தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
- கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்திசுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.