என் மலர்

  நீங்கள் தேடியது "Vijay Sethupathi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
  • மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

  மாமனிதன்

  மாமனிதன்

   

   இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

   

  மாமனிதன்

  மாமனிதன்

  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினை பெற்றிருந்தது.

    

   

  இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை குவித்துள்ளது. தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விருதுகளை குவித்து வரும் மாமனிதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
  • இவரின் பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

  மாளவிகா மோகனன் 

  மாளவிகா மோகனன் 

  இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

   

  மாளவிகா மோகனன் 

  மாளவிகா மோகனன் 

  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


   


  மாளவிகா மோகனன் - விஜய் சேதுபதி 

  மாளவிகா மோகனன் - விஜய் சேதுபதி 

  அதில், என் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக உருவாக்கி என்னை மிகவும் நேசிக்கவும் சிறப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் அன்பு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  மாளவிகா மோகனன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
  • மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

  இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


  மாமனிதன்

  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டினர்.

  இந்நிலையில், இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினை பெற்றுள்ளது. இதனை இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  • இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

  கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

  விஜய் சேதுபதி

  இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

  இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’.
  • இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கிறார்கள்.

  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

  சூர்யா - விஜய் சேதுபதி

  சூர்யா - விஜய் சேதுபதி

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  சூர்யா - விஜய் சேதுபதி

  சூர்யா - விஜய் சேதுபதி

  இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன்பு தனது தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
  • அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

  '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


  19(1)(a) போஸ்டர்

  மேலும், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

  நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போன்று வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
  • அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

  '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

  19(1)(a)

  19(1)(a)

  இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன்.
  • மாமனிதன் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

  இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


  மாமனிதன்

  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படம் விரைவில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  'மாமனிதன்' படத்தின் சிறப்புக்காட்சியில் இடதுசாரி தலைவர்கள், தமிழக காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திரைத்துறையினர், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர்.
  • தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

  விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.  கடந்த ஜூன் 9ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது. இந்த ஜோடி தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், விக்னேஷ் தனது சமூக ஊடக பதிவில் இந்த படங்களைப் பகிர்ந்து கொண்டார்.  ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள், இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:- "இதற்கு மேல் யார் என்ன கேட்க முடியும்! எங்கள் திருமணத்தின் போது இந்த அடக்கமான, கனிவான, அழகான மற்றும் அற்புதமான மனிதர் எங்களுடன் இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன்! பாட்ஷாவும் அவருடனான நேரமும்! பேரின்பம்! பாக்கியம்.  ரஜினிகாந்த் சார் - எங்கள் திருமணத்தை மிகவும் நேர்மறை மற்றும் நல்லெண்ணத்துடன் அவரது மதிப்புமிக்க வருகையால் ஆசீர்வதித்தார். எங்கள் சிறப்பு நாளின் ஒரு மாத நிறைவு விழாவில் சில சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை ஷாலினி அஜித், நடிகர் சூர்யா-ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சரத் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அவர்கள் தங்கள் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
  • மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

  இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


  மாமனிதன் படக்குழு

  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படம் விரைவில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் "மாமனிதன் திரைப்படத்தை ஆஹா இணைய வழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை சமூக வலைதளத்தில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும் ஒரு முறை இப்படைப்பை காணவேண்டுமென விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
  • இந்த படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


  ஜவான்

  இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


  விஜய் சேதுபதி - ஷாருக்கான்

  சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி வருகின்றனர். அதன்படி, ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo