சினிமா

இயக்குநராக அவதாரம் எடுக்கும் அருண்ராஜா காமராஜ்

Published On 2017-08-30 06:34 GMT   |   Update On 2017-08-30 06:34 GMT
நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
`பீட்சா' படத்தில் இரு பாடல்களை எழுதியதின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுமானவர் அருண்ராஜா காமராஜ். அதனைத் தொடர்ந்து `ராஜா ராணி' படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் `கபாலி' படத்தில் எழுதிய ``நெருப்புடா'' பாடலால் மிகவும் பிரபலமானார். பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கப்பட்ட அந்த பாடலால் அடுத்தடுத்து மாஸ் பாடல்களை எழுதவும் தொடங்கினார்.

படம் இயக்க வேண்டும் என்று சினிமாவில் அடிஎடுத்து வைத்த அருண்ராஜா தொடக்கத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியல் பங்கேற்றிருந்தார். பாதியில் கைவிடப்பட்ட சிம்புவின் வேட்டை மன்னன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.



இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்குநராக புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருக்கிறார். அந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. அந்த படத்திற்கான திரைக்கதையை மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார். மேலும் இந்த படம் தந்தை - மகளுக்கு இடையேயான பிணைப்பை எடுத்துக் காட்டும் படமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சில உண்மை சம்பவங்களைத் தழுவியும் கதையை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News