ஆட்டோமொபைல்

மூன்று மாடல்களை வெளியிடும் யமஹா

Published On 2018-01-15 10:12 GMT   |   Update On 2018-01-15 10:12 GMT
ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா இந்தியாவில் மூன்று மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் யமஹா YZF-R15 V3.0, புதிய 125சிசி ஸ்கூட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட பி.எஸ். 4 YZF-R3 என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யமஹா புதிய 125சிசி ஸ்கூட்டர் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் இந்த மாடல் நோஸா கிரான்ட் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 8.2 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.7 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் கார்புரேடெட் இன்ஜின் கொண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 99 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய ஸ்கூட்டர், நகரங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். ஃபியூயல் கேப், சீட் உள்ளிட்டவற்றை அன்லாக் செய்ய பட்டன், 27 லிட்டர் அன்டர்-சீட் ஸ்டோரேஜ், 12-இன்ச் அலாய் வீல் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. 



யமஹா YZF-R15 V3.0 மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாடலின் புகைப்படம் ஏற்கனவே பலமுறை இணையத்தில் கசிந்திருந்த நிலையில், இந்திய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய யமஹா YZF-R15 V3.0 மாடல் 155சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் 19 பி.எச்.பி. பவர் மற்றும் 14.7 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

யமஹா YZF-R15 V3.0 இந்திய மடால் BS-IV ரக மாடலாக இருக்கும் என்றும் இதன் 300 சிசி ஃபேர்டு மாடல் மோட்டார்சைக்கிள் BS-IV மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் மீண்டும் வெளியாக இருக்கிறது. யமஹா YZF-R3 மாடலில் 321சிசி பேரலெல் டுவின் இன்ஜின் 41bhp மற்றும் 29.6Nm செயல்திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News