கார்

டொயோட்டா ருமியன் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-04-29 11:24 GMT   |   Update On 2024-04-29 11:24 GMT
  • புதிய ருமியன் வேரியண்டில் 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
  • இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ருமியன் காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. ருமியன் G AT என அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரின் வினியோகம் மே 5 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய டொயோட்டா ருமியன் G AT வேரியண்டுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

புது வேரியண்ட் அறிமுகம் செய்த கையோடு ருமியன் சி.என்.ஜி. வேரியண்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் மீண்டும் துவங்கியது. ருமியன் சி.என்.ஜி. ஆப்ஷன் S வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.

 


புதிய ருமியன் G AT வேரியண்டில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா ருமியன் G AT வேரியண்டில் 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ கனெக்ட் தொழில்நுட்பம், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., இ.எஸ்.பி., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News