கார்

ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புது கிராவைட் காரை அறிமுகப்படுத்திய நிசான்

Published On 2026-02-18 13:48 IST   |   Update On 2026-02-18 13:48:00 IST
  • நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
  • கிராவைட் மாடல் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வருகிறது.

நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராவைட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கிராவைட் எஸ்யூவி மாடல் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நிசான் கிராவைட் மாடலின் விலை ரூ. 5.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

புதிய கிராவைட் மாடல் அப்ரைட் மற்றும் பாக்ஸி ஸ்டைல் கொண்டிருக்கிறது. இத்துடன் டெக்ஸ்ச்சர்கள் கொண்ட அகலமான பிளாக் நிற கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள், மெல்லிய எல்.இ.டி. உள்ளது. இதன் முன்புற பம்ப்பரில் C வடிவ இன்சர்ட்கள், இருபுறமும் ஆரஞ்சு நிற அக்சென்ட்கள் இடம்பெற்றுள்ளன.

பக்கவாட்டுகளில் வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கதவுகளில் கிராஃபிக் ஒட்டப்பட்டுள்ளது. பின்புறத்தில் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், ரிவைஸ்டு பம்ப்பர் மற்றும் அக்சென்ட் டீடெயிலிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறத்தில் 8-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெல்லிய ஏர்-வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் எம்.பி.வி. போன்றே புதிய நிசான் கிராவைட் மாடலும் 5+2 இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த கார் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு இந்த 6 ஏர்பேக், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் (AMT) யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 19.3 முதல் அதிகபட்சம் 19.6 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News