பைக்

பெரிய பைக் மாடல்களை இந்தியா கொண்டுவரும் கே.டி.எம். - எப்போ தெரியுமா?

Published On 2024-05-02 11:28 GMT   |   Update On 2024-05-02 11:28 GMT
  • 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
  • அதிக அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் கே.டி.எம்.-இன் பெரிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

தற்போது கே.டி.எம். இந்தியா நிறுவனம் புதிய 390 டியூக் மாடலை மட்டுமே பெரிய பைக் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் 399சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

 


தற்போதைய தகவல்களின் படி கே.டி.எம். 890 டியூக் ஸ்டிரீட் நேக்கட், 890 அட்வென்ச்சர் அல்லது 990 டியூக் மற்றும் 1390 சூப்பர் டியூக் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. 890 டியூக் மாடல் அதிக அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

இதில் கே.டி.எம். 890 டியூக் மாடல் அந்நிறுவனத்தின் கே.டி.எம். 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 890 அட்வென்ச்சர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

டூரிங் மற்றும் ஆஃப் ரோட் ரைடிங் என இருவித பயன்பாடுகளுக்கும் ஏற்ற மாடலாக 890 அட்வென்ச்சர் விளங்குகிறது. இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் டைகர் 900 மற்றும் சுசுகி வி ஸ்டாம் 800DE மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இந்திய சந்தையில் கே.டி.எம்.-இன் பெரிய பைக் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News