பைக்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமான பல்சர் 125

Published On 2026-01-28 15:02 IST   |   Update On 2026-01-28 15:02:00 IST
  • இன்டிகேட்டர்களும் எல்இடி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இந்த பைக் சிங்கிள் சீட், ஸ்பிளிட் சீட் என இரு வகை இருக்கை வடிவங்களில் கிடைக்கும்.

பல்சர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124.4 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.64 hp பவரையும், 10.8 nm டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய பல்சர் பைக்கின் தோற்றப்பொலிவு சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்புறம் ஹலோஜன் லைட்களுக்கு பதிலாக எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிகேட்டர்களும் எல்இடி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் பிளாக் கிரே, பிளாக் ரேசிங் ரெட், பிளாக் சியான் புளூ, ரேசிங் ரெட் மற்றும் டான் பீஜ் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பைக் சிங்கிள் சீட், ஸ்பிளிட் சீட் என இரு வகை இருக்கை வடிவங்களில் கிடைக்கும். இந்த பைக்கின் கார்பன் டிஸ்க் சிங்கிள் சீட் மாடலின் விலை ரூ.89,910 (எக்ஸ்-ஷோரூம்), ஸ்பிளிட் சீட் மாடல் விலை ரூ.92,046 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News