பைக்

ரூ. 1.31 லட்சம் விலையில் ஸ்பெஷல் எடிஷன் பைக் அறிமுகம் செய்த டிவிஎஸ்

Published On 2025-12-17 14:54 IST   |   Update On 2025-12-17 14:54:00 IST
  • இந்த மோட்டார்சைக்கிளில் தனித்துவமாக, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இதன் டேங்க் பகுதியில் புளூ மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் இடம்பெற்றுள்ளன.

டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரோனின் அகோண்டா எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 225 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 20.4 hp பவர், 19.9 நியூட்டன் மீடஅடர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் தனித்துவமாக, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது.

இதன் டேங்க் பகுதியில் புளூ மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை ரூ.1.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டிவிஎஸ் ரோனின் சீரிசில் என்ட்ரி லெவல் மற்றும் மிட் ரேஞ்ச் மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News