பைக்

குறைந்த விலையில் புது செட்டாக் அறிமுகம் செய்யும் பஜாஜ்?

Published On 2024-04-28 10:58 GMT   |   Update On 2024-04-28 10:58 GMT
  • எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் போட்டியை பலப்படுத்த முடியும்.
  • புதிய வேரியண்டில் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. யூனிட் வழங்கப்படலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மேலும் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நம்புகிறது.

இதோடு, புதிய வேரியண்ட் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் போட்டியை பலப்படுத்த முடியும் என பஜாஜ் ஆட்டோ நினைக்கிறது. தரம் மற்றும் செயல்திறனில் எவ்வித சமரசமும் இன்றி குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் புதிய வேரியண்ட் உருவாக்கப்படுகிறது.

அதன்படி புதிய வேரியண்ட் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களுக்கு மாற்றாக அழகிய டிசைன் கொண்ட வீல்கள், டிரம் பிரேக்குகளை கொண்டிருக்கும் என ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் செட்டாக் வேரியண்டில் உள்ள டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீனுக்கு மாற்றாக புதிய வேரியண்டில் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. யூனிட் வழங்கப்படலாம். புதிய வேரியண்டில் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த வேரியண்டிலும் 2.9 கிலோவாட் ஹவர் யூனிட் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 113 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய வேரியண்ட் ஓலா S1 X பிளஸ், ஏத்தர் ரிஸ்டா, டி.வி.எஸ். ஐகியூப் மற்றும் சிம்பில் டாட் ஒன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Tags:    

Similar News