ரூ. 4.22 லட்சத்தில் 2026 அப்ரிலியா RS 457 அறிமுகம்... என்னென்ன ஸ்பெஷல்..?
- இந்த வெர்ஷனில் மோட்டோ ஜிபி சார்ந்த டிசைன் இடம்பெற்றுள்ளது.
- இந்த பைக்கில் மூன்று ரைடு மோட்கள் உள்ளன.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் தனது RS 457 மோட்டார்சைக்கிளின் 2026 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் - GP ரெப்ளிகா, அர்செனிக் எல்லோ மற்றும் கோரல் ஸ்னேக் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. 2026 அப்ர்லியா RS 457 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 4.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் அர்செனிக் எல்லோ மற்றும் ஸ்னேக் புளூ நிற வேரியண்ட்களின் விலை ரூ. 4.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளின் டாப் என்ட் RS GP ரெப்ளிகா விலை ரூ. 4.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெர்ஷனில் மோட்டோ ஜிபி சார்ந்த டிசைன் இடம்பெற்றுள்ளது.
நிறங்கள் தவிர இந்த பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் புதிய RS 457 மோட்டார்சைக்கிளிலும் 457சிசி லிக்விட் கூல்டு பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 47 ஹெச்பி பவர், 43.5 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த பைக்கில் மூன்று ரைடு மோட்கள், அட்ஜஸட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.