கார்

புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட 2024 போர்ஸ் குர்கா இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-05-03 11:22 GMT   |   Update On 2024-05-03 11:22 GMT
  • புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2024 குர்கா சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய 2024 போர்ஸ் குர்கா மாடலின் மூன்று கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம் என்றும் ஐந்து கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 18 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்பைடயில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2024 போர்ஸ் குர்கா மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். 2024 குர்கா மாடலின் வெளிப்புறம் புதிய அலாய் வீல்கள், ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

 


உள்புறத்தில் புதிய இருக்கை மேற்கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் TPMS, முன்புறம் டூயல் ஏர்பேக், 8.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 132 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் 4 வீல் டிரைவ் வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் என்ட்ரி லெவல் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News