ஆட்டோ டிப்ஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் எண்ட்ரி கொடுத்த டொயோட்டாவின் ஃபியூவல் செல் வாகனம்

Update: 2023-01-13 13:34 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபியூவல் செல் வாகனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
  • புதிய ஃபியூவல் செல் வாகனம் 640 கிலோமீட்டர் வரையிலான டிரைவிங் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மிரய் ஹைர்டஜன் ஃபியூவல் செல் வாகனத்தை காட்சித்து வைத்து இருக்கிறது. ஏற்கனவே 2022 மார்ச் மாத வாக்கில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டு இருந்தது.

தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மிரய் இரண்டாம் தலைமுறை மாடல் ஆகும். முன்னதாக 2020 வாக்கில் இந்த மாடல் சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டொயோட்டா மிரய் GA-L ரியர் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் டொயோட்டா ஃபியூவல் செல் ஸ்டாக் மற்றும் டிரைவ்டிரெயின் பாகங்களை ரிபேகேஜ் செய்திருக்கிறது. இத்துடன் அதிகபட்சமாக மூன்று ஹைட்ரஜன் டேன்க்-கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

மிரய் மாடல் ஹைட்ரஜன் ஃபியூவல் செல் ஸ்டாக் மூலம் 174 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 640 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. காரின் ஏர் ஃபில்ட்டரில் கேடலிஸ்ட் டைப் ஃபில்ட்டர் இருப்பதால் பயணம் செய்யும் போதே மிரய் காற்றை சுத்தப்படுத்தும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. முந்தைய மாடலை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் மிரய் மாடல் மெல்லிய ஸ்டைலிங், லோ ஸ்லங் ஸ்டான்ஸ் மற்றும் கூப் போன்ற பின்புறம் உள்ளது.

இதன் உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட அளவில் பெரிய, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில் 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீடெட் ஸ்டீரிங் வீல், ஹீடெட் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஏராளமான ADAS தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News