என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Car"
- மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
- ஆல்டோ K10 விலை ரூ. 3.99 லட்சம் விலையில் துவங்குகிறது.
ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ஹூணடாய் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் வரிசையில், மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகம் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு துவங்கி மாருதி சுசுகி கார்களின் விலை உயர்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் ஆல்டோ K10 மாடல் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் விலையில் துவங்குகிறது. இத்துடன் இந்த நிறுவனத்தின் இன்விக்டோ மாடலின் விலை ரூ. 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ. 1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம் புது M2 மாடல் 486 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும். எனினும், காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. M டிரைவர் பேக்கேஜ் பெறும் போது இந்த காரின் வேகத்தை மணிக்கு 285 கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ M2 மாடல் தற்போது- போர்டிமௌ புளூ, ஃபயர் ரெட், சௌ பாலோ எல்லோ மற்றும் ஸ்கை-ஸ்கிராப்பர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- 2 இளைஞர்கள் காரின் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
- காயமடைந்த 2 இளைஞர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் காரின் சன்ரூப் வழியாக 2 இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது காரில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கந்த்வேதா கிராமத்தில் திருமண வரவேற்பு ஊர்வலத்திற்கு வந்த காரில் 2 இளைஞர்கள் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது காருக்குள்ளே ஒரு பட்டாசு வெடிக்க அதன்பின் அனைத்து பட்டாசுகளை காருக்குள்ளே அடுத்தடுத்து வெடிக்க துவங்கியது.
இதனால் காருக்குள் தீப்பிடித்தது. இதனையடுத்து காயமடைந்த 2 இளைஞர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#BreakingNews #सहारनपुर: फतेहपुर के गंदेवद में शादी समारोह के दौरान सनरूफ से आतिशबाजी कर रहे युवक की कार में लगी आग। यह घटना कैमरे में कैद हुई, वीडियो वायरल।#FireAccident #ViralVideo #WeddingMishap pic.twitter.com/gw3tGX6VG0
— Pawan Sharma (Saraswat) (@Pwnkusharma) November 27, 2024
- உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
- இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் தனது லோகோவை மாற்றி இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் முந்தைய லோகோ நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
இந்த நிலையில் சீன சந்தையில் மட்டும் லோகோவை மாற்றுவது என ஆடி நிறுவனம் எடுத்துள்ள முடிவு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் வளையங்கள் அடங்கிய லோகோ பயன்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்திய ஆட்டோ நிகழ்வில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்திய இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பேக் மாடலில் இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
கான்செப்ட் வாகனத்தின் முகப்பில் ஆடி (AUDI) என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்று இருந்தது. முன்னதாக மற்றொரு உலகின் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான ஜாகுவார் தனது லோகோவை மாற்றிய நிலையில், தற்போது ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி இருக்கிறது.
சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஆடி தனது லோகோவை மாற்றியுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயித்துள்ளன.
- இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
- ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபல கார் மாடலாக சியரா விளங்குகிறது. இந்த நிலையில், சியரா பிராண்டிங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முற்றிலும் புதிய சியரா மாடல் எலெக்ட்ரிக் மற்றும் ஐ.சி. எஞ்சின் என இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
இதில் முதற்கட்டமாக சியரா எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும். இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கர்வ் எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐசி எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சியரா மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Acti.EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டாடா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் ஆகும். இதே பிளாட்பார்மில் முன்னதாக டாடா பன்ச் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் உருவாகி இருக்கும் சியரா மாடலில் இரட்டை மோட்டார் செட்டப் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய சியரா மாடலில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கார் மீது குரங்கு விழுந்ததில் காரின் சன்ரூப் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. அப்போது காருக்குள் விரிந்த குரங்கு உடனடியாக வெளியே குதித்து தப்பி ஓடியது.
தொழிலதிபர் முகேஷ் ஜெய்ஸ்வாலின் கார் கண்ணாடியை தான் குரங்கு உடைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் படும் அவதியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ले बे ये गया तेरा सन रूफ ?? pic.twitter.com/n82LOoJKO4
— Raja Babu (@GaurangBhardwa1) November 19, 2024
- புது ஸ்விப்ட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளது.
- இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் தனது நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் விற்பனையிலும் அதிக யூனிட்களை பதிவு செய்து வருகிறது. இந்த கார் புதிய 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்துடன் புதிய ஸ்விப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்த 3 சிலிண்டர் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 4 சிலிண்டர் எஞ்சினுடன் கிடைக்கிறது. இதுதவிர ஸ்விப்ட் மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய ஸ்விப்ட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனுடன் பெரிய பேட்டரி மூலம் ஸ்டிராங் ஹைப்ரிட் வசதி வழங்கப்படும் பட்சத்தில் இந்த கார் லிட்டருக்கு 35 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதில் புதிய ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி டெஸ்டிங் செய்யப்படுவது அம்பலமாகி இருக்கிறது. மேலும், இந்த காரின் பின்புறத்தில் ஹைப்ரிட் என்பதை உணர்த்தும் பேட்ஜ் காரின் பின்புறத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஹைப்ரிட் வசதியுடன் இந்த காரில் ADAS அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மாருதி சுசுகியின் புதிய ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் 2025 ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மார்ச் மாத வாக்கில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம்.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் கோடியக் வாங்குவோருக்கு குறுகிய கால சிறப்பு சலுகை அறிவித்து இறுக்கிறது. அதன்படி இன்று (நவம்பர் 19) நள்ளிரவுக்குள் புதிய ஸ்கோடா கார் வாங்குவோருக்கு ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஸ்கோடா கோடியக் மாடல் ஒற்றை டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவை 2023 மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தவிர கோடியக் எஸ்யுவி மாடலின் புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தலைமுறை கோடியக் மாடல் தற்போதுள்ள மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பவர்டிரெயின் ஆப்ஷன்களிலேயே கிடைக்கும் என்று தெரிகிறது. எனினும், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படலாம்.
- அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
- இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M340i செடான் மாடலை அப்டேட் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ. 74.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மேம்பட்ட இன்டீரியர் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
அதன்படி புதிய பிஎம்டபிள்யூ கார்- ஆர்க்டிக் ரேஸ் புளூ, ஃபயர் ரெட், பிளாக் சஃபையர், டான்சனைட் புளூ மற்றும் டேவிட் கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. உள்புறத்தில் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏசி வென்ட்கள் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 369 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
- ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.
ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.
மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
The Kerala Police took strict action against a car owner who blocked an ambulance from overtaking! They imposed a 2.5 lakh fine, suspended his driving license for 25 years, and personally delivered the challan to his home! Such firm measures remind us of the importance of… pic.twitter.com/VLMeawlXqh
— Tahir Peerzada (@TahirPeerzada_) November 17, 2024
- ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சம் இருசக்கர வாகனங்கள், 1.5 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி மட்டுமின்றி, பிற மாநிலங்களின் சாலைகளில் இயங்குகின்றன.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை என்ஜின் சி.சி., அடிப்படையில் வாகன பதிவு வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. 170 சி.சி., வரையுள்ள பைக்குகளுக்கு ரூ.850, 170 சி.சி., மேல் உள்ள டூவீலர்களுக்கு ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 1 சதவீதம் என்ற இந்த வரி, இருசக்கர வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. இந்த என்ஜின் சி.சி., அடிப்படையிலான பதிவு வரியை கைவிட போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இனி வாகன மதிப்பில் வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. எனவே தற்போதுள்ள 1 சதவீதத்திற்கு பதிலாக 2 சதவிகிதமாக வாகன பதிவு வரியை வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கார்களுக்கு இணையாக பல லட்சம் மதிப்பில் சொகுசு டூவீலர்கள் சாலையில் ஓடுகின்றன. இந்த பைக்குகளுக்கு ரூ.1,200 தான் பதிவு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே சொகுசு பைக்குகளுக்கு பதிவு வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் 7 சதவீத வாகன பதிவு வரியை, 8 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து துறை, 156 கோடியாக வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு ரூ.171 கோடியாக போக்குவரத்து துறை இலக்கு நிர்ணயித்துள்ள சூழ்நிலையில் இதுவரை ரூ.155 கோடியாக வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
- அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.
தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
जब चली Railway Track पर थार#TharOnTrack #OffroadAdventure #DesiVibes #PowerRide #MahindraThar #Jaipurnews #Updateindia #Breakingnews pic.twitter.com/wcqsrb1Txs
— Update India (@UpdateIndia_TV) November 12, 2024
அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்