ஆட்டோ டிப்ஸ்
null

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பிஎம்டபிள்யூ

Published On 2023-07-24 13:51 GMT   |   Update On 2023-07-24 14:19 GMT
  • பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் தனது கார்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் அறிவித்தது. 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 9 சதவீத யூனிட்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும்.

2025 வாக்கில் இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவன தலைவர் விக்ரம் பாவா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் i7, ix, i4 மற்றும் மினி SE போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது. 

Tags:    

Similar News