ஆட்டோ டிப்ஸ்

புக்கிங்கில் மாஸ் காட்டும் பென்ஸ் GLC.. வெளியான சூப்பர் அப்டேட்..!

Published On 2023-08-11 16:00 GMT   |   Update On 2023-08-11 16:00 GMT
  • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
  • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 73 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 4 மேடிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பென்ஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலை வாங்க இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1.5 லட்சம் ஆகும். இந்த தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

 

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் விலை ரூ. 73.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலில் தற்போதைய மாடலில் இருப்பதை விட காஸ்மடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

இந்த காரின் நீளம் 60 மில்லிமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது 4716 மில்லிமீட்டராக உள்ளது. இதன் மூலம் காரின் வீல்பேஸ் 15 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு தற்போது 2888 மில்லிமீட்டராக இருக்கிறது. காரின் பின்புறத்தில் பம்ப்பர் சற்று கூர்மையாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், பவர்டு டெயில்கேட் வழங்கப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேடிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News