ஆட்டோ டிப்ஸ்
null

மழையில் பைக் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை!

Published On 2023-06-30 07:59 GMT   |   Update On 2023-06-30 08:01 GMT
  • பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது.
  • மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது.

மழையில் நனைந்து கொண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டும் வழக்கம் அனைவருக்கும் இருக்காது. சிலருக்கு இவ்வாறு செய்வது பிடிக்கும், சிலருக்கு மழையில் பைக் ஓட்டுவது சிக்கலான காரியமாக இருக்கும். ஒருசிலர் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மழையில் பைக் ஓட்டுவதை தவிர்த்து விடுவர்.

எதுவாயினும், மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது. அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் நிலை ஏற்பட்டால், சில வழிமுறைகளை பின்பற்றினால் அச்சம் கடந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணத்தை நிறைவு செய்து விடலாம். அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

 

நிறங்கள்:

மழையோ, வெயிலோ எந்த காலத்தில் பைக் எடுத்தாலும், சீட்டில் உட்காரும் முன் தேவையான பாதுகாப்பு அக்சஸரிக்களை அணிந்து கொள்வது அவசியம் ஆகும். மழையின் போது சாலையை அதிக தெளிவாக பார்க்க முடியாது என்பதால், சற்றே பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது. இத்துடன் நீர்புகாத வசதி கொண்ட ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். இதுவும் சற்றே பிரகாசமான நிறம் கொண்டிருத்தல் நல்லது.

வேகம்:

மழையில் பைக் ஓட்டும் போது முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 முதல் 20 மீட்டர்கள் இடைவெளி விட்டு செல்வது அவசியம் ஆகும். மேலும் பைக்கை முடிந்த வரை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்.

ஒருவேளை காரின் பின்னாடி பைக் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், பைக்கினை டயர் காரின் பின் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு பைக் ஓட்டும் போது, கார் ஏதேனும் பள்ளத்தில் இறங்குவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் வீண் பதற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

 

பாதை:

மழை காலங்களில் எல்லா சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதில்லை. சில இடங்களில் சாலையில் நீர் உடனடியாக வடிந்து விடும். சில பகுதிகளில் ஈரம் காய்ந்துவிடும். இதுபோன்ற பகுதிகளில் ஈரமான பகுதியை தவிர்த்து, நீர் காய்ந்து போன பகுதியில் பைக் ஓட்டலாம். ஈரமான தரையை விட ஈரமற்ற தரையில் பைக் அதிக சீராகவும், கண்ட்ரோல் சிறப்பாகவும் இருக்கும்.

சுற்றுப்புறம்:

மழையின் போது சுற்றுப்புறங்களை அதிக கவனமுடன் கையாள வேண்டியது அவசியம் ஆகும். அடிக்கடி கண்ணாடிகளை சரிபார்ப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இன்டர்செக்ஷன் அல்லது ரவுன்டானா உள்ளிட்டவைகளை கடக்கும் போது, மற்ற வாகனங்கள் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

Tags:    

Similar News