ஆட்டோ டிப்ஸ்

மழைகால கார் பராமரிப்பு - இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

Published On 2023-07-04 08:28 GMT   |   Update On 2023-07-04 08:28 GMT
  • கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது நல்லது.
  • வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காலம் துவங்கி விட்டது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தமிழகத்திலும் வானிலை அடிக்கடி மாறிக் கொண்டே தான் வருகிறது. வரும் மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், கார் பயன்படுத்துவோர் அதனை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பார்கிங்கில் கவனம் தேவை:

வெள்ள பாதிப்பில் சிக்காமல் இருக்க கார்களை எளிதில் தண்ணீர் சூழும் பகுதிகளில் பார்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் காலத்தில் முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட்டு காரை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வது பெருமளவு பாதிப்பை தவிர்க்க உதவும். வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து பணத்தை மிச்சம் செய்யலாம்.

பேட்டரி பாதுகாப்பு:

கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது காரில், ஷாட் சர்கியூட் அல்லது எலெக்ட்ரிக் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க செய்யும். புதிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது சற்றே கடினமான காரியம் ஆகும்.

 

ஜன்னல்களில் கவனம்:

மழை மட்டுமின்றி கார் பயன்பாட்டின் போது பின்பற்ற வேண்டிய மிக முக்கிய விஷயம் ஜன்னல்களை மூடி வைப்பது. பலரும் கார் ஜன்னல் மற்றும் கதவுகளை சரியாக மூடாமல் விட்டுவிடுவர். இதனை சரியாக செய்தால், மழை காலங்களில் கார்களுக்குள் நீர் புகாமல் இருக்கும்.

கசிவு மற்றும் துரு:

காரில் ஏதேனும் பகுதியில் கசிவு அல்லது துருப்பிடித்து இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். மழை காலங்களில் கார் எளிதில் துருப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும். இதனை சரிபார்க்கும் போது கார்களில் உள்ள ரப்பர் பீடிங்களையும் சரிபார்ப்பது நல்லது.

ரப்பர் மேட்:

காரை சுத்தமாக வைத்துக் கொள்ள ரப்பர் மேட் பயன்படுத்தலாம். ரப்பர் மேட்களை சுத்தப்படுத்துவது எளிமையான காரியம் ஆகும். இதனை நிமிடங்களில் கழுவவும், காய வைக்கவும் முடியும். இதுதவிர ரப்பர் மேட்கள் கார்பெட் லைனிங் ஈரமாவதை தடுக்கும். 

Tags:    

Similar News