ஆட்டோ டிப்ஸ்

கிராஷ் டெஸ்டில் அசத்திய 2022 ரேன்ஜ் ரோவர்

Update: 2022-11-19 10:50 GMT
  • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் கிராஷ் டெஸ்ட் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
  • தற்போது இரு கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியுள்ளன. கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 கார்களில் ஒரு காரும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெறவில்லை.

ரேன்ஜ் ரோவர் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 84 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.1 புள்ளிகளையும், சிறியவர்கள் பயணிக்கும் போது 87 சதவீத புள்ளிகளையும் பெற்றது. இதில் 49-க்கு 43 புள்ளிகளை பெற்றது. பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீதம் பெற்றது. இதில் 16-க்கு 13.2 புள்ளிகள் வழங்கப்பட்டன. 2022 ரேன்ஜ் ரோவர் மாடல் ஆபத்தான சாலைகளில் 72 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 54-க்கு 39.1 புள்ளிகளை பெற்றது.

யூரோ NCAP டெஸ்டில் கலந்து கொண்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது 85 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.4 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட டெஸ்டிங்கிலும் 85 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளது.

காரில் உள்ள பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீத புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 16-க்கு 13.2 புள்ளிகளை ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் பெற்றது. ஆபத்தான சாலைகளில் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 69 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் 54-க்கு 37.5 புள்ளிகளை பெற்றுள்ளது.

Tags:    

Similar News