ரிஷபம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-04-22 04:26 GMT   |   Update On 2024-04-22 04:27 GMT

22.4.2024 முதல் 28.4.2024 வரை

திடீர் ராஜயோகம் உண்டாகும் வாரம். ராசியை குரு நெருங்கிக் கொண்டிருக்கிறார். 8.11-ம் அதிபதி குரு ராசிக்குள் நுழையப் போவதால் திடீர் ராஜயோகம் உங்களை வழி நடத்தும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும். முயற்சிகளும், எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும். தொழில் முன்னேற்றங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்ப வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும். தன வரவு தாராளமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு.

புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்று வீடு, வாகன யோகம் அடைவீர்கள். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எதையும் சமாளிக்கும் தைரியமும் இருக்கும். கண் திருஷ்டி, போட்டி உருவாகும். 28.4.2024 அன்று அதிகாலை 4.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பவுர்ணமியன்று ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News